சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:கோவையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (81) இவர் நேற்று முன் தினம்தங்களது தோட்டத்து கிணற்றில் பழுதடைந்த மோட்டாரை தனது மகன் குமாரவேல் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து டிராக்டர் உதவியோடு மேலே இழுத்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென மோட்டர் கட்டப்பட்ட கயிறு அறுந்ததால் அருகே நின்ற கருப்புசாமி நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் இறங்கி உள்ளே இருந்த கருப்பசாமியை மேலே எடுத்து வந்தனர். அவரை சோதனை செய்த போது அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததுதெரியவந்தது.
இதையடுத்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.