வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6-மாதம் சிறைத் தண்டனை மற்றும் 2,000-ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6-மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை அருகே உள்ள அப்பாச்சி கவுண்டன் பதியை சேர்ந்தவர் நஞ்சன் மகன் காளிமுத்து (28). இவரது மனைவிக்கு கடந்த செப்டம்பர் 12, 2017, கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தையை பார்க்க தனது உறவினர்களுடன் கோவை அரசு மருத்துவமனை வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது உக்கடத்தில் இருந்து சுல்தான்பேட்டை செல்லும் அரசு பேருந்து (எண் s27) பேருந்து மோதியதில் காளிமுத்து படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
இந்த விபத்து தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் (30) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 6-மாதம் சிறைத் தண்டனை மற்றும் 2,000-ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டுள்ளார்.