கோவை மதுக்கரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வசூல் மையத்தின் மீது பாய்ந்த டேங்கர் லாரி - ஊழியர் படுகாயம்..!

தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், பொக்லைன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பாலத்துறை அருகே சுங்கச்சாவடி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆந்திராவிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற சிமெண்ட் கலவை டேங்கர் லாரியை பைஜூ என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கோவை வழியாக சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கேரள நோக்கிச் சென்ற போது கோவை மதுக்கரை, பாலத்துறை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 4.30 மணியளவில் வந்த போது, லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் முன்னால் நின்ற ஈச்சர் மீது மோதி, சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்தின் மீது மோதியுள்ளார்.



இதில் வசூல் மையத்தில் பணியில் இருந்த மதுக்கரையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வந்து பிரேம்குமாரை மீட்டு மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், பொக்லைன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் லாரி ஓட்டுநர் பைஜூ பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...