கேரளாவுக்கு கடத்த முயற்சித்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசியை கொண்டு செல்ல முயன்ற இருவரை கைது செய்தனர்.
கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை கைது செய்து 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களை தடுக்க, பொள்ளாச்சியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் வடவள்ளி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று வடவள்ளி ரோடு பேரூர் மேம்பாலம் சந்திப்பு அருகில், ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50-கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் சுமார் 3000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி (28) மற்றும் இயேசுராஜ் (49) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவையைச் சேர்ந்த முனீஸ் என்பவர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கேரளாவுக்கு கடத்த முயற்சித்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தைபறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற இருவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள முனீஸ் என்பவரை தேடி வருகின்றனர்.