கோவை பொள்ளாச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு..!

விவசாயி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (61). இவருக்கு, சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

வழக்கமாக காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொண்ட பின்னர், தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க மோட்டார் அறைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற செந்தில்குமார் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் விவசாய நிலத்தில் தேடிப் பார்த்தனர்.

அப்போது, கிணற்றில் செந்தில்குமார் உடமைகள் சில மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் கிணற்றில் இறங்கி சோதனை செய்தபோது, செந்தில் குமாரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



நீச்சல் தெரியாத செந்தில்குமார் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...