நபிகள் நாயகம் சர்ச்சை: பாஜக நிர்வாகிகளை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி..!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பொள்ளாச்சியில் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜவாஹிருல்லா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.



இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுப்பூர் ஷர்மா மற்றும் டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிந்தா ஆகியோரை யு.எ.பி.எ(UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

பாஜக அரசு யு.எ.பி.எ சட்டத்தை இஸ்லாமியர்கள் மீது மட்டுமே பயன்படுத்தி உள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசிய பாஜக நிர்வாகிகள் நுப்பூர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தா ஆகிய இருவரும் தான் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முழு தகுதி உடையவர்கள் என்று தெரிவித்தார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த இருவர் யு.எ.பி.எ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த ஜவாஹிருல்லா, பாஜக அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...