வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழக்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 150, பிளஸ் 2 படித்தவர்களுக்கு 200 ரூபாய், பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு 300 ரூபாய் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. 

இந்த உதவித்தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும்.

2017-ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும், மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில், மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

இதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராகவும், முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

மேலும், மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

ஏற்கனவே, உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களின் சுயஉறுதி மொழி ஆவணத்தை வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவட்டை நகலுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து தொடர்ந்து உதவித் தொகை பெறலாம்.

இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...