கோவை TNAU-வில்‌ பழப்பயிர்கள்‌ துறையில்‌ பட்டியலின வகுப்பினருக்கான தொழில்நுட்ப செயல்‌ விளக்க திடல்‌..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பழப்பயிர்கள்‌ துறையில்‌ தொழில்நுட்ப செயல்‌ விளக்க திடல்‌ அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ உதவியுடன்‌ கடந்த மூன்று வருடங்களாக பட்டியலின வகுப்பினருக்கான (SCSP) நடைபெற்று வருகிறது.


திருப்பூர்‌: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பழப்பயிர்கள்‌ துறையில்‌ தொழில்நுட்ப செயல்‌ விளக்க திடல்‌ அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌ உதவியுடன்‌ கடந்த மூன்று வருடங்களாக பட்டியலின வகுப்பினருக்கான (SCSP) நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில்‌ வாழை மற்றும்‌ பப்பாளியில்‌ உயர்‌ விளைச்சல்‌ தரும்‌ உயிரிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தும்‌ நோக்கில்‌ ஒவ்வொரு வருடமும்‌ ஐந்து விவசாயிகள்‌ தேர்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான இடுபொருட்கள்‌ இலவசமாகக் கொடுக்கப்பட்டு பின்‌, செயல்‌ விளக்கம்‌ விவசாயிகளின்‌ வயல்களில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வாழை மற்றும்‌ உயர்‌ விளைச்சலுக்கான ஒருங்கிணைந்த உர மற்றும்‌ நீர்‌ மேலாண்மை, களை மேலாண்மை, வாழைத்தாருக்கு உறையிடல்‌, வாழை இலைச்சருகு நோய்‌ மேலாண்மை, பப்பாளி வளைய புள்ளி, நச்சுயிரி நோய்‌ மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள்‌ திருப்பூர்‌, கோபி மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட்டன.

இந்த வருடம்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ குன்னத்தூரில்‌ செயல்விளக்க திடல்கள்‌ நடைபெற்று வருகிறது. இதுவரை குறைந்த பட்சம்‌ 150 விவசாயிகள்‌ இதில்‌ கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை அறிந்துள்ளனர்‌.

இப்பயிற்சியில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பழப்பயிர்கள்‌ துறை பேராசியர்‌ மற்றும்‌ தலைவர்‌ ஜே.அக்ஸீலியா இணைப்‌ பேராசிரியர்‌ பேராசிரியர்‌ சூக. மனோரஞ்சிதம்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ சி.கவிதா மற்றும்‌ க.பா. சுஜாதா ஆகியோர்‌ கலந்து கொண்டு தொழில்நுட்ப உரைகளை வழங்கினர்‌.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...