தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பழப்பயிர்கள் துறையில் தொழில்நுட்ப செயல் விளக்க திடல் அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருடங்களாக பட்டியலின வகுப்பினருக்கான (SCSP) நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பழப்பயிர்கள் துறையில் தொழில்நுட்ப செயல் விளக்க திடல் அகில இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருடங்களாக பட்டியலின வகுப்பினருக்கான (SCSP) நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் வாழை மற்றும் பப்பாளியில் உயர் விளைச்சல் தரும் உயிரிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் ஐந்து விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான இடுபொருட்கள் இலவசமாகக் கொடுக்கப்பட்டு பின், செயல் விளக்கம் விவசாயிகளின் வயல்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வாழை மற்றும் உயர் விளைச்சலுக்கான ஒருங்கிணைந்த உர மற்றும் நீர் மேலாண்மை, களை மேலாண்மை, வாழைத்தாருக்கு உறையிடல், வாழை இலைச்சருகு நோய் மேலாண்மை, பப்பாளி வளைய புள்ளி, நச்சுயிரி நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் திருப்பூர், கோபி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன.
இந்த வருடம் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் செயல்விளக்க திடல்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை குறைந்த பட்சம் 150 விவசாயிகள் இதில் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை அறிந்துள்ளனர்.
இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பழப்பயிர்கள் துறை பேராசியர் மற்றும் தலைவர் ஜே.அக்ஸீலியா இணைப் பேராசிரியர் பேராசிரியர் சூக. மனோரஞ்சிதம் மற்றும் உதவிப் பேராசிரியர் சி.கவிதா மற்றும் க.பா. சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரைகளை வழங்கினர்.