கோவை பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது..!

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை தங்கம்(61). இவரது மகன் கார்த்திக் கண்ணன்(33), சென்னையில் ஐடி ஊழியராக இருந்தார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

குடிப்பழக்கம் காரணமாக அவரது மனைவி விவாகரத்து வாங்கி சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கார்த்திக் கண்ணன் மற்றும் அவரது தந்தை சர்க்கரை தங்கம் குடும்பத்துடன் வஞ்சியாபுரம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று குடிபோதையில் வந்த கார்த்திக் கண்ணன் அவரது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சர்க்கரை தங்கம் கார்த்திக் கண்ணன் கழுத்தில் அணிந்திருந்த துண்டை இறுக்கி இழுத்துச் சென்று கட்டிலில் தள்ளியதாகத் தெரிகிறது.

அப்போது, அருகில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்த கார்த்திக் கண்ணனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற கோட்டூர் போலீசார், உயிரிழந்த கார்த்திக் கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சர்க்கரை தங்கதைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...