கோவையில் எல்லா கடைகளிலும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு: மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தல்!

கோவையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நெகிழி பைகளை தவிர்த்துவிட்டு மீண்டும் மஞ்சப்பைகள் பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நெகிழி பைகளை தவிர்த்துவிட்டு மீண்டும் மஞ்சப்பைகள் பயன்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ தமிழ்நாடு முதலமைச்சா்‌ மீண்டும்‌ மஞ்சப்பை இயக்கம்‌ தொடங்கப்பட்ட நாளில்‌ இருந்து மிகச்சிறப்பாக நெகிழி இல்லாத கோவையை உருவாக்கிட மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌, மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில்‌ பழைய காலத்தில்‌ பயன்படுத்திய மஞ்சப்பை பழக்கத்தினை கொண்டுவர வேண்டும்‌ என்பதற்காக முதல்வர் தொடங்கிய திட்டத்தை மொத்த மாநகராட்சி பகுதிகளில்‌ இருக்க கூடிய அனைத்து கடைகளுக்கும்‌ சென்று சேரும்‌ வண்ணம்‌, அனைத்து கடைகளுக்கும்‌ விழிப்புணர்வு பிரச்சாரங்கள்‌ மற்றும்‌ துண்டு பிரசுரங்கள்‌ மூலம்‌ நெகிழி பைகளை தவர்த்து விட்டு மீண்டும்‌ மஞ்சப்பைகளை பயன்படுத்திட தெரிவித்துள்ளோம்‌.

அதேபோல்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பு மிக முக்கியமானது. பொதுமக்கள்‌ எங்கு சென்றாலும்‌ கைகளில்‌ ஒரு மஞ்சப்பை எடுத்து சென்று, கடைகளில்‌ பொருட்கள்‌ வாங்குவது அல்லது பிற உபயோகத்திற்கு பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு நமது மாநகராட்சியின்‌ சார்பில்‌ தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள்‌ மூலமாகவும்‌, துண்டு பிரசுரங்கள்‌ மூலமாகவும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்திக்‌ கொண்டு வருகிறோம்‌. மேலும்‌, கடைகளுக்கு திடீர்‌ ஆய்விற்கு செல்லும்‌ அனைத்து அலுவலர்களும்‌ கடைகளில்‌ பிளாஸ்டிக்‌ பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அவ்வாறு பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால்‌ அவற்றை உடனடியாக பறிமுதல்‌ செய்து, சம்மந்தப்பட்ட கடையின்‌ உரிமையாளருக்கு அபராதம்‌ விதிக்கப்பட வேண்டும்‌.

மேலும்‌, பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்‌ என்னவென்றால்‌ முதல்வர் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாநகராட்சி நிர்வாகத்தின்‌ மூலமாக நெகிழி இல்லாத கோவையை உருவாக்கும்‌ நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ தங்களுடைய முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌. அதேபோல்‌ வியாபாரிகள்‌ நெகிழி பொருட்கள்‌ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்‌. தற்போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என வீடுகளிலேயே பொதுமக்கள்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து கொடுக்கின்றனர்‌. அதன்‌ மூலம்‌ பிளாஸ்டிக்‌ குப்பைகளை தனியே பிரித்து, அவற்றை இயந்திரங்களின்‌ மூலம்‌ சிறு துகள்களாக மாற்றப்பட்டு சிமெண்ட்‌ தயாரிக்கும்‌ நிறுவனங்களுக்கும்‌, தார்சாலை அமைக்கும்‌ பணிகளுக்கும்‌ வழங்கப்பட்டு வருகின்றது” என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...