கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


கோவை: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.



கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் மத்திய அலுவலக நுழைவாயில் முன்பு தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், ரீ டிப்ளாய்மெண்ட் முறையை கைவிட வேண்டும், தமிழக அரசின் உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், கேங்மேன் பயிற்சி பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிரந்தர ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...