கோவை வால்பாறையில் மழை -பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!

இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், நடைபாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



வால்பாறை சோலையாறு அணை உருக்கள், வரட்டுப் பாறை, வில்லோனி பச்சைமலை, கருமலை, புது தோட்டம், பெரியகல்லார், சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடைப் பாதை வியாபாரிகள் கடைகள் நடத்த முடியாமல் சிரமம் மேலும் வால்பாறையில் பெய்து வரும் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சோலையார் அணை நிலவரம்:-

அணைக்கு நீர்வரத்து 262.27-கன அடியாகவும்

அணையின் நீர் இருப்பு 2025-கன அடி

நீர் மட்டம் 3214 கன அடியாகவும்

அணையின் உயரம் 84 /165 அடி உயரம் உள்ளது.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...