விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சூலூர் நெடுஞ்சாலையில் கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை சூலூர் அருகேநேற்று இரவு சுமார் 7 மணியளவில், கேரளாவிலிருந்து கோவையை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, அங்கு சாலையை கடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த சூலூர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாததால், சூலூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.