கோவையில் காளப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, இருசக்கர வாகனம் திருட்டு…!

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர். வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை காளப்பட்டி சேரன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு, பொறியாளர். இவர் கடந்த 4-ந் தேதி நண்பரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தென்காசி சென்றிருந்தார். பின்னர், இன்று காலை தென்காசியில் இருந்து கோவை திரும்பினார்.

அப்போது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்கு, குங்குமசிமிழ், 1.5 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் மாயமானது தெரியவந்தது.

மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர், மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...