கோவையில் சேவல் திருட முயன்ற இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

கோவை பேரூர் பகுதியில் சேவலை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.


கோவை: கோவை பேரூர் பகுதியில் சேவலை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பேரூர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை பேரூர் அடுத்த மாதம்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் தீபன் குமார். இவரது மனைவி பூங்கொடி (29). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டின் அருகில் தையல் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த நாய் குறைத்ததாக தெரிகிறது. அப்போது பூங்கொடி வெளியே வந்து பார்த்தபோது அவர் வீட்டில் வளர்த்து வரும் இரண்டு சேவல்களை மூன்று நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது. அப்போது பூங்கொடி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்த தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விடுவேன் என மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பேரூர் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மருது (29) கோவையில் தங்கி ஓட்டுநர் வேலை செய்தவர் வருவதும், மற்றொருவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (21) சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் இருவரும் மற்றொரு நபருடன் சேர்ந்து சேவலை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...