கோவையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு!

கோவையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலத்தில்‌ சீர்மிகு நகரத் திட்டத்தின் ‌கீழ்‌ வார்டு எண்‌.83க்கு உட்பட்ட ஆடிஸ்‌ வீதியில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையம்‌ கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன்‌ மாநகரப் பொறியாளர்‌ (பொ) இராமசாமி, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ சங்கர்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர் இருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது அவருடன்‌ மாநகரப் பொறியாளர்‌ (பொ) இராமசாமி, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ சங்கர்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி பொறியாளர்‌ திரு.கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர் இருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



அப்போது அவருடன் உதவி செயற்பொறியாளர்‌ (Jnnurm) பி.உமாதேவி, இளம்பொறியாளர்‌ சரவணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்‌.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...