கோவை கே.ஜி சாவடி அருகே மளிகை கடையில் ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா பறிமுதல் - கடை உரிமையாளர் கைது!

கோவையில் கே.ஜி சாவடி அருகில் உள்ள மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் கே.ஜி சாவடி அருகில் உள்ள மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கே.ஜி சாவடியை அடுத்த காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாத் (37). இவர் அதே பகுதியில் விக்னேஸ்வரா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கே.ஜி சாவடி போலீசார் இன்று மாலை அங்கு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவரது மளிகை கடையில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ.48 ஆயிரம் மதிப்புடைய 21 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதையடுத்து பத்ரிநாத்தை கைது செய்த கே.ஜி சாவடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...