கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளா இளைஞர் கைது!

கோவையிலிருந்து வாளையார் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



கோவை: கோவையிலிருந்து வாளையார் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் இருந்து வாளையார் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கே ஜி சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கே ஜி சாவடி உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் உள்ளிட்ட போலீசார் வாளையார் சர்வீஸ் சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வந்த வாடகை ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு வட்டப்பர பகுதியை சேர்ந்த ரங்கன் மகன் சிவன் (24) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கோவை உக்கடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.



இதையடுத்து சிவனை கைது செய்த போலீசார் ஆட்டோவில் இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிவன் மற்றும் பிடிபட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...