கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மணமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு..!

மணமக்களை கட்டாயப்படுத்தி போலீசார், அழைத்துச் சென்றதாகவும், அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு போலீசார், முழு பொறுப்பேற்க வேண்டும் என மணமகனின் உறவினர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் மணமக்களை பரமக்குடி போலீசார் கோவையிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26), தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பரமக்குடியைச் சேர்ந்த கவுசல்யா (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் கார்த்திக் – கவுசல்யா இருவரும் நேற்று கோவை தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் பரமக்குடி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, பரமக்குடியில் இருந்து கோவை வந்த போலீசார், கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து கார்த்திக் மற்றும் கவுசல்யாவை விசாரணை நடத்தினர். இதையடுத்து, போலீசார் கவுசல்யாவை கட்டாயப்படுத்தி பரமக்குடிக்கு போலீசிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், கவுசல்யாவை அழைத்தவுடன் அவருடன் கார்த்திக்கும் சென்றுள்ளார். கவுசல்யா போலீசாருடன் செல்ல மறுத்த நிலையில், கட்டாயப்படுத்தி போலீசார், அவரை அழைத்துச் சென்றதாகவும், அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு போலீசார், முழு பொறுப்பேற்க வேண்டும் என கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...