கோவை தனியார் பேருந்தில் ரூ.1 கூடுதல் கட்டணம் வசூல் - பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.

தனியார் பேருந்தில் நிர்ணயக்கப்பட்ட கட்டண தொகையை விட ரூ. 1 அதிகமாக வசூல் செய்வதாக, பயணி ஒருவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பாதிக்கபட்ட பயணிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


கோவை: தனியார் பேருந்தில் நிர்ணயக்கப்பட்ட கட்டண தொகையை விட ரூபாய். 1 அதிகமாக வசூல் செய்வதாக, பயணி ஒருவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பாதிக்கபட்ட பயணிக்கு ரூபாய். 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் (26). கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி, கோவை இரயில் நிலையத்தில் இருந்து சிங்காநல்லூருக்கு செல்ல "மேனகா" டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது, அந்த பேருந்தில் ரூ.5 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு சின்ராஜ், மற்ற பேருந்துகளில் ரூ.4 தானே கட்டணம், நீங்கள் ஏன் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கிறீர்கள்..?என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த பேருந்து நடத்துநர், டிக்கெட் விலையை உயர்த்தி விட்டோம். ரூ.5 தான் கட்டணமாக வசூலிக்கிறோம், என்று பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி, அதே பேருந்தில் சிங்காநல்லூரில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பயணித்துள்ளார்.அப்போதும், ரூ.4-க்கு பதிலாக ரூ.5 கட்டணம் வசூலித்து உள்ளனர்.

உடனே, இது குறித்து சின்ராஜ் அந்த தனியார் பேருந்துநிறுவனத்துக்கு கடிதம் எழுதி, தன்னிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப செலுத்துவதுடன், கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், அந்த நிறுவனம் சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சின்ராஜ் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னிடம் 3 முறை கூடுதலாக வசூலித்த கட்டணம் ரூ.3 மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், தனியார் பேருந்து நிறுவனத்தில் சேவை குறைபாடு இருப்பது உறுதியானதால், சின்ராஜிக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், அவரிடம் இருந்து வசூலித்த கூடுதல் டிக்கெட் கட்டணமன ரூ.3 மற்றும் வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும், என்று தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...