இந்தியாவின்‌ முதல்‌ மாநிலமாக 'மண்‌ காப்போம்‌' இயக்கத்துடன் குஜராத்‌ முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம்‌!

சத்குருவின் மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து முதல் மாநிலமாக குஜராத் முதல்வர் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.


கோவை: மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ இணைந்து குஜராத்‌ மாநிலத்தில்‌ மண்‌ வளத்தை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ குஜராத்‌ முதல்வர்‌ பூபேந்திரபாய்‌ பட்டேல்‌ மற்றும்‌ சத்குரு ஆகியோர்‌ முன்னிலையில்‌ நேற்று (மே 30) கையெழுத்திடப்பட்டது.

இதன்மூலம்‌, சர்வதேச சுற்றுச்சூழல்‌ இயக்கமான ‘மண்‌ காப்போம்’‌ இயக்கத்துடன்‌ கரம் கோர்த்த முதல்‌ இந்திய மாநிலம்‌ என்ற பெருமையை குஜராத்‌ பெற்றது.



அஹமதாபாத்தில்‌ நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்‌ பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும்‌, குஜராத்‌ அரசின்‌ பருவநிலை மாற்றத்‌ துறையின்‌ அரசு அதிகாரிகளும்‌ பங்கேற்றனர்‌.

விழாவில்‌ குஜராத்‌ முதல்வர்‌ பேசுகையில்‌, “இந்த பூமியில்‌ நாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமான மண்ணையும்‌, மற்ற அனைத்து உயிரினங்களையும்‌ பாதுகாப்பதில்‌ குஜராத்‌ மாநிலம்‌ முன்னணியில்‌ இருக்கும்‌” என்று உறுதியளித்தார்‌.



சத்குரு பேசுகையில்‌, “மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொண்ட முதல்‌ இந்திய மாநிலமாக குஜராத்‌ இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மண்‌ வளத்தை மீட்டெடுப்பதற்காக, மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ எளிய வழிமுறைகளுடன்‌ தயாரித்துள்ள கையேட்டின்‌ அடிப்படையில்‌, மாநில அரசு விரிவான கொள்கைகளை விரிவாக்கலாம்‌” என்றார்‌.

முன்னதாக, சத்குரு வர்த்தக சபை மற்றும்‌ தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசினார்‌. இது தொடர்பாக செய்தியாளர்களிடம்‌ அவர்‌ பேசுகையில்‌, "விவசாயிகளுக்கு கார்பன்‌ கிரெடிட்‌ (மரங்கள்‌ வளர்க்கும்‌ விவசாயிகளுக்கு தொழில்துறையினர்‌ வழங்கும்‌ ஒரு வகை ஊக்கத்தொகை) கிடைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும்‌. இதை தொழில்துறையினர்‌ தங்களது பொறுப்பாக கருத வேண்டும்‌. நாங்கள்‌ தென்னிந்தியாவில்‌ 1.3 லட்சம்‌ விவசாயிகளுடன்‌ பணி செய்துள்ளோம்‌. அவர்களுக்கு கார்பன்‌ கிரெடிட்டை பெற்று தருவதற்காக கடந்த 7 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம்‌. ஆனால்‌, அது இன்னும்‌ சாத்தியம்‌ ஆகாமல்‌ உள்ளது. கார்பன்‌ வெளியீட்டை கட்டுப்படுத்துவதில்‌ பெரிதும்‌ பங்காற்றும்‌ விவசாயிகளுக்கு அதற்கான பலன்‌ கிடைக்க வேண்டும்‌” என்றார்‌.



விவசாய நிலங்களில்‌ குறைந்தபட்சம்‌ 3 முதல்‌ 6 சதவீதம்‌ கரிமச்‌ சத்து இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான சட்டங்களையும்‌ கொள்கைகளையம்‌ அரசாங்கங்கள்‌ உருவாக்க வேண்டும்‌ என்பதே 'மண்‌ காப்போம்‌' இயக்கத்தின்‌ பிரதான நோக்கமாகும்‌. இந்தியாவில்‌ உள்ள மண்ணில்‌ கரிமச்‌ சத்தின்‌ அளவு சராசரியாக 0.5 சதவீதத்திற்கும்‌ குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேநிலை நீடித்தால்‌, அடுத்த 45 முதல்‌ 60 ஆண்டுகள்‌ மட்டுமே நம்மால்‌ இந்த மண்ணில்‌ விவசாயம்‌ செய்ய முடியும்‌ என ஐ.நா அமைப்புகள்‌ எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனவே, உலகளவில்‌ நிகழ்ந்து வரும்‌ மண்‌ அழிவை தடுத்து, இழந்த மண்‌ வளத்தை மீட்டெடுக்கும்‌ நோக்கத்தில்‌ மண்‌ காப்போம்‌ இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார்‌. இதற்காக, கடந்த மார்ச்‌ 21-ம்‌ தேதி லண்டனில்‌ இருந்து 100 நாள்‌ பைக்‌ பயணத்தை தொடங்கிய அவர்‌ ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும்‌ மத்திய ஆசியாவில்‌ உள்ள 26 நாடுகளுக்கு பயணித்து மே 29-ம்‌ தேதி இந்தியா வந்தார்‌.

உலகளவில்‌ பெரும்‌ வரவேற்பை பெற்ற அவரின்‌ பயணத்தின்‌ வெற்றியாக இதுவரை 74 நாடுகள்‌ மண்‌ காப்போம்‌ இயக்கத்திற்கு ஆகரவு தெரிவித்துள்ளன. அத்துடன்‌, ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பு (UNCCD), ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (UN WFP), இயற்கை பாதுகாப்பிற்கான சுற்றுச்சூழல்‌ அமைப்பு (IUCN)‌ ஆகிய அமைப்புகள்‌ இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...