1-ஆம் தேதி முதல் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்: வானதி சீனிவாசன்..!

1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், மத்திய அரசு வாக்குறுதிகளை கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட பிரசுரங்களை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கி எடுத்துரைத்தார்.



பின்னர் பாஜக அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்ட அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நாடுகளை கொரோனா பாதிப்பு அச்சுறுத்திய சூழலில் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கி மக்களை பாதுகாத்த தலைவராக பிரதமர் உள்ளார் என தெரிவித்தார்.

மேலும் உணவு தானியம், தடுப்பூசியை தாண்டி, சிறு குறு தொழில்களுக்கு உதவியுள்ளார் என்றும் பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தி உள்ளார் என்றும் டிஜிட்டல் பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகம் அதிக பலன் அடைந்து உள்ளதாகவும் கூறினார். முத்ரா கடன் தமிழகத்திற்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் செல்வமகள் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, ஆகியவற்றில் தமிழகம் பயனடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொழில்துறையில் 3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது எனவும் தெரிவித்தார். இஸ்லாமிய பெண்களுக்குத் திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றும் மத்தியில் பதினோரு பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பெண்கள் சொந்தமாகத் தொழில் புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உலக அளவில் கூட்டமைப்பை உருவாக்கியவர் மோடி என கூறினார். மேலும் பிரதமர் தேவையில்லாத சட்டங்களை நீக்கி அவசியமான சட்டங்களைக் கொண்டு கொண்டு வந்தவர் என்றும்

நாட்டில் இருந்த பிரதமர்களின் வாழ்க்கைகளை தெரிந்துகொள்ள அலுவலகத்தை அமைத்துள்ளார் என்றும் கூறினார்.

மேலும் நதிகளை இணைக்க பிரதமர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார் என கூறிய அவர் அதற்காக தமிழகமும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார். வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதில் பிரதமர் லட்சியமாக உள்ளார் என தெரிவித்தார். கலவரங்கள் இல்லாமல் மக்கள் இணக்கத்துடன் வாழவேண்டும், மத சுதந்திரத்தை காக்கின்ற அரசாக இந்த அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக எந்த வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறிய அவர் மத்திய அரசு வாக்குறுதிகளை கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். பாஜக ஆதரவாளர் கார்திக் கோபினாத் கைது தொடர்பாக பேசிய அவர், மீண்டும் மீண்டும் பாஜக ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறீர்கள் என்று தான் நாங்கள் பார்க்கிறோம் என கூறினார்.

கருத்துக்களை பொது வெளியில் சட்டத்திற்கு உட்பட்டு சொல்வதற்கும், அதேபோல விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல கைது செய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா? மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இம்மாதிரியான முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அந்த கனவு ஒரு போதும் பலிக்காது என தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என தெரிவித்ததற்கு கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், தேசியக்கொடிக்கு என கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் படி இருப்பது ஒரு போதும் பாஜக மாற்ற நினைக்காது என கூறினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...