கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை; ரூ.8.40 லட்சம் பறிமுதல்.

சோதனையின் போது, கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளரின் காரில் ரூ.5.90 லட்சம் மற்றும் அவரது அலமாரியில் ரூ.2.50 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) நிறுவனத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், ஆய்வாளர் பரிமளா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



பணி நிரந்தரம் செய்யவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு வழங்கப்படும் அரியர் பணம் வழங்க, உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சோதனையின் போது, கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது காரில் ரூ.5.90 லட்சம் மற்றும் அவரது அலமாரியில் இருந்து ரூ.2.50 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருக்கு பணம் கொடுத்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...