கோவை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்து ஆய்வு..!

கோவையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடையும் போது மருத்துவ சுற்றுலா மேம்பாடு அடையும், என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: சிசு மரணம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும், என்ற இலக்குடன்தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதுதெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்திற்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, புதிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



மேலும், ரூபாய்.110 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெய்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்,200 முதியவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை, வழங்கினார்.

பின்னர்,செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2099 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு இன்று

பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



இதில், அனைத்து வசதிகளுடனான நவீன உபகரணங்களை கொண்டு சிகிச்சை பிரிவு உள்ளதால் நோயாளிகளுக்கு மிகுந்த பயனை தரும் எனவும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் 12 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சை பிரிவில், தற்கொலை முயற்சி செய்யும் நோயாளிகளுக்கான தனி சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெய்கா நிதியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. வரும் காலங்களில், நோயாளிகளின் தேவைக்கு தகுந்தபடி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்", என்று தெரிவித்தார்.

மேலும், கோவையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பினருடனான கூட்டத்தில், மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகள்பெறப்பட்டுள்ளதாகவும், கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள்70 சதவீதம் முடிவடைந்துள்ள சூழலில் இரு ஆண்டுகளில் பணி முடிவடையும் போது மருத்துவ சுற்றுலா மேம்பாடு அடையும், என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.



"வெஸ்ட் நைல் வைரஸ்" பரவல் குறித்து விளக்கியஅமைச்சர், கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு நோய் பரவல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற 12 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவ துவங்கியுள்ளதால், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் குரங்கம்மை நோய் குறித்த அறிகுறியோ, சந்தேகமோ இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் மக்கள் அந்நோய் குறித்துப் பயப்பட வேண்டாம், என்று அமைச்சர் தெரிவித்தார்.



மேலும், பிரிட்டன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமான பயணி ஒருவரின் முகத்தில் கொப்புளம் இருந்ததால், அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பூனே ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அவருக்கு குரங்கம்மை நோய் தொற்று இல்லை, என சான்று வந்துள்ளதாக தெரிவித்தார்.

"குறைவான குழந்தை சிசு மரணத்தில், கேரளா முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சிசு மரணம் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக முதல்வர் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு சிசு இறப்பு 18 என்ற நிலையிலிருந்து, தற்போது 13 என்று குறைந்துள்ளது. விரைவில் ஒற்றை இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக", அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...