கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில், ஜூன் மாதம் இரண்டாவது வாரம்.முதல தொடர்ந்து 45 நாட்கள் பொருட்காட்சி நடத்தப்படும், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை
கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தால் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் பொருட்காட்சி நடத்தப்படும், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள பொருட்காட்சியில், 27 அரசு துறைகளுக்கு தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட 6 அரசு சார்பு நிறுவனங்களுக்கும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.