உத்தராகண்ட் மலைப்பாதையில் நடந்த விபத்தில் கோவை பத்திரிகையாளர் பலி..!

தனியார் ஆங்கில நாளிதழில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர், கார்த்திக் மாதவன் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.


கோவை: உத்தராகண்ட் மலைப்பாதையில் நடந்த விபத்தில் கோவை பத்திரிகையாளர் உயிரிழந்தார்.

உத்தராகண்ட் மாநிலம், உத்திகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரிக்கு நேற்று 14 பேர் கொண்ட குழுவினர் வேனில் சென்றுள்ளனர். அப்போது கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்து குறித்துதகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் கோவை தனியார் ஆங்கில நாளிதழ் (தி இந்து நாளிதழ்) செய்தியாளர் கார்த்திக் மாதவன் (45), மற்றும் அவுரங்காபாத்தை சேரந்த அல்கா போடே (46). ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக உத்திரகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையை சேர்ந்த பத்திரிகையாளர் உத்தரகாசியில் உயிரிழந்த சம்பவம் சக பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...