கோவையில் முதல் முறையாக மகளுக்கு ‘ஜாதி, மதம் அற்றவர்’ என சான்றிதழ் வாங்கிய தம்பதிகள்…!

கோவை தம்பதிகள் மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ஜாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில், முதல் முறையாக3.5 வயது குழந்தைக்கு ஜாதி, மதம்அற்றவர் என சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் கே.கே.புதூர் சிந்தாமணி நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் S நரேஷ் கார்த்திக், (33). சீட் ரீப்ஸ் கல்வி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர். இவரது மனைவி காயத்திரி, தென்னக ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு, ஜி.என். வில்மா (3.5) என்ற பெண் குழந்தை உள்ளது.

நரேஷ் கார்த்திக் தனது மகள் வில்மாவை பள்ளியில் சேர்ப்பதற்காக ஜாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இது குறித்து அவர் கூறும் போது:-

“எனது மகள் வில்மாவை எந்த ஜாதி அல்லது மதத்திலும், அடைக்க நான் விரும்பவில்லை. நான் அவளை கீழ் மழலை வகுப்பில் சேர்க்க சில பள்ளிகளை அணுகினேன். நான் சரிபார்த்த போது, பள்ளி விண்ணப்பங்களில் 'NoCaste' பத்திகள் இல்லை. விண்ணப்பங்களில், சாதி அல்லது மதத்தை குறிப்பிடவில்லை என்றால், பள்ளி நிர்வாகம் விண்ணப்பங்களை ஏற்கவில்லை.

மேலும், சமூக சான்றிதழ் கட்டாயம், இல்லையெனில் குழந்தையை சேர்க்க முடியாது என்றனர்.

தமிழக அரசின் 1973 ஆம் ஆண்டு உத்தரவின்படி, பள்ளியில் குழந்தையை சேர்க்கும் போது ஜாதி, மதம் குறித்த விவரங்களை பெற்றோர் குறிப்பிட தேவையில்லை என கல்வித்துறைக்கு வலியுறுத்தியதைப் பற்றி அறிந்தேன். பின்னர், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து இது குறித்து கேட்ட போது, அவர் கோவை வடக்கு தாசில்தாரை அணுகுமாறு கூறினார். இதையடுத்து, ரூ. 20 மதிப்புள்ள முத்திரைத் தாளில் சுய உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்து, தனது மகளுக்கு ஜாதி மற்றும் மதம் இல்லை என்ற சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்.

இவ்வாறு விண்ணப்பித்தால், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் எந்த விதமான அரசு இடஒதுக்கீடு அல்லது சலுகைகளும் கிடைக்காது. மேலும், வருங்காலத்தில் சாதி, மதம் மாறுதல்களுக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கையொப்பமிட்டு, நோட்டரி பப்ளிக் கையொப்பம் பெற்று வடக்கு தாசில்தாரிடம் சமர்ப்பித்து சான்றிதழை பெற்றேன்", என்றார் கார்த்திக்.

"வெள்ளிக்கிழமை மாலை முதல் என் குழந்தை வில்மா எந்த ஜாதியையும் அல்லது எந்த மதத்தையும் சேர்ந்தவர் அல்ல. கடவுள் என்றால் என்ன என்று என் மகளிடம் யாராவது கேட்டால், கடவுள் என்றால் "அன்பு" என்று பதில் சொல்வாள். காதல் என்றால் என்ன என்று யாராவது கேட்டால், காதல் என்றால் "சமத்துவம்" என்று பதில் சொல்வாள்.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அன்பையும், சமத்துவத்தையும் கற்பிக்க வேண்டும். எனது மகளுக்கு எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு சலுகைகள் கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால், இது மற்ற தேவைப்படும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் பலன்களைப் பெற இந்த முயற்சி உதவும்", என்று நரேஷ் கார்த்திக் கூறினார்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு "No Caste, No Religion" சான்றிதழை பெறுவது என்பது குறித்த சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளனர் என்று கூறிய நரேஷ், இனிமேல் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான சான்றிதழ்களைப் பெற முன்வருவார்கள் என்றும் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் நரேஷ்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...