ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93 நாடுகளுக்கு பயண அனுமதி பெற்ற பயணி இவர்.


Coimbatore: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை விரட்டியதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எடிஸ்லாவ் லியன் (38) என்பவர் நேற்று காலை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் மாங்கரை சலங்கை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அங்கு வந்துள்ளது. யானையைப் பார்த்ததும் சுற்றுலா பயணி உயிர் பயத்தில் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். சிறிது தூரம் அவரைத் துரத்திய யானை பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.



இதற்கிடையில், வேகமாக ஓடிய சுற்றுலா பயணி கால் தவறி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்ததில் சிறு காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த எடிஸ்லாவ் லியன், 93 நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி பெற்ற பயணி எனவும், கேரளாவில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாடகை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி – மாங்கரை வழியாக ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் வெளியே வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோவை அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவை வனத்துறை அதிகாரிகள், ஆனைகட்டி – மாங்கரை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் வெளியே வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். காட்டுப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி செல்வது ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...