ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இந்தத் திட்டம் நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.


சென்னை: 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதற்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம் மற்றும் தங்க, வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்தில் புதிய வடிவமைப்புடன் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ₹642 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு முதற்கட்டமாக ₹300 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட வழிவகை செய்த கைத்தறித் துறை அமைச்சர், துறை உயர் அதிகாரிகள் மற்றும் நெசவாளர்களின் நலனை முன்னிறுத்தி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, பொங்கல் இலவச வேட்டி-சேலை திட்டத்தை தரமான முறையில் செயல்படுத்தவும் உதவும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...