ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 அணிகள் கலந்துகொண்டன. ஆண்கள் பிரிவில் S.V.G.V. Matric பள்ளியும், பெண்கள் பிரிவில் PSGR Krishnammal பள்ளியும் முதலிடம் பெற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன.






இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 அணிகள் கலந்துகொண்டன. கல்லூரி முதல்வர் Dr. D. Gopalkrishnan போட்டிகளை தொடங்கி வைத்தார்.




இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில், ஆண்கள் பிரிவில் S.V.G.V. Matric பள்ளி முதலிடத்தையும், Keerthiman Matric மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும், வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மூன்றாமிடத்தையும், Crescent Matric பள்ளி நான்காமிடத்தையும் பெற்றன.




தனிநபர் விருதுகளில், Best Spiker-ஆக Keerthiman Matric பள்ளியின் Gokul Harish, தடுப்பாட்டத்தில் சிறந்த வீரராக S.V.G.V. பள்ளியின் Dinesh, Best Server-ஆக Crescent Matric பள்ளியின் Sabat Ahmed, Best Defender-ஆக ஸ்ரீராம கிருஷ்ணா மெட்ரிக்பள்ளியின் Sanjay, Best Setter-ஆக Keerthiman Matric பள்ளியின் Saswanth தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த விளையாட்டு வீரராக S.V.G.V. Matric பள்ளி மாணவர் Sanjay J.P தேர்ந்தெடுக்கப்பட்டார்.




பெண்கள் பிரிவில் PSGR Krishnammal பள்ளி அணி முதலிடத்தையும், S.V.G.V. Matric பள்ளி இரண்டாமிடத்தையும், Annai Violet பள்ளி அணி மூன்றாமிடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி நான்காமிடத்தையும் பெற்றன.




தனிநபர் விருதுகளில், Best Spiker-ஆக Annai Violet பள்ளியின் Anu, தடுப்பாட்டத்தில் சிறந்த வீரராக S.V.G.V. பள்ளியின் Janavarshini, Best Server-ஆக ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியின் Iniyarasi, Best Defender-ஆக S.V.G.V. பள்ளியின் Chandramathi, Best Setter-ஆக Annai Violet பள்ளியின் Cathy Hannah தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக PSGR Krishnammal பள்ளி மாணவி Mahisha தேர்ந்தெடுக்கப்பட்டார்.




மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் Computer துறை மாணவி Thanuja வரவேற்பு உரையாற்றினார். கல்லூரி முதல்வர் Dr. D. Gopalkrishnan தலைமை வகித்து உரையாற்றினார்.




சிறப்பு விருந்தினராக கோவை Anaimala Toyota நிறுவனங்களின் துணைத் தலைவர் (விற்பனை பிரிவு) R. Sivaraman கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசும்போது, "சிறந்த விளையாட்டு வீரன் காலை நேர கடிகார அலாரம் அடிப்பதற்கு முன் எழுவான். எதிர் அணி வீரர்களின் பலத்தை கண்டு அஞ்சாமல் தன் அணியின் வெற்றி ஒன்றே குறியாக கொண்டிருப்பான். வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக கொள்பவன் தோல்வி அடைவதில்லை" என்று ஊக்கமளித்தார்.




நிகழ்வின் இறுதியில் Computer துறை மாணவி Hashini நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் Swaminathan, மின்னியல் துறை D. Santhosh ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...