கோவையில் பாதுகாப்பு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை

கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் அருகே அமைந்துள்ளது பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பு. முக்கிய பிரமுகர்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் தனியார் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து திருப்பூரில் பனியன் ஏற்றுமதி செய்துவரும் சிவானந்த் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டு விட்டிற்கு திரும்பிவந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 28 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு அந்தக் குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...