கோவை காரமடை எஸ்.பி.ஐ.வங்கி ஏ.டி.எம் இல் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் தப்பிய மர்ம நபர்…!

நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள மருதூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம்மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில், இரவு நேரத்தில் மட்டும் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருக்கும்.



இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் முக மூடி அணிந்து எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மிற்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.



இருவரில், ஒருவர் வெளியில் இருந்து கண்காணிக்க, மற்றொருவர் ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் நுழையும் முன்பு அலாரம் ஒயரை துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது,அலாரம் ஒலிக்கவே, இருவரும் தங்களது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...