'பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து', அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவை காந்தி புரத்தில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலிபோராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலத்திற்குள் சென்று மீண்டும் அட்டப்பாடி அருகே தமிழகப்பகுதிக்குள் நுழைகின்றது. இந்நிலையில் கேரள பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இரண்டு இடங்களில் கட்டுமானப்பணிகளை துவங்கியுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்த கோரி கோவை காந்தி புரத்தில் அனைத்துகட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக ,கொங்குநாடு ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள், தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டதின் போது பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பவானி ஆற்று பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையும், விவசாய பிரச்சினையும் ஏற்படும் எனவும்  பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அணை கட்டப்படுவதை தடுக்காவிட்டால் வரும் 29ம் தேதி அனைத்து கட்சியினருடன் சென்று அணை கட்டப்படும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் அதனை தொடந்து மாணவர்களை திரட்டி கேரள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கேரள அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...