கோவையில் திராவிட மாடல் பயிலரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர் லெனின், மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பெருமிதத்தோடு கூறினார்.
கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் திராவிட மாடல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.சந்திரசேகர், முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர் லெனின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்கள், மாற்று சமுதாய மக்கள் என எந்தவித பாகுபாடுமின்றி பொது சுடுகாடு, திருமண மண்டபம் என சமத்துவபுரம் என்ற கட்டமைப்பை உருவாக்கி திராவிட மாடலை ஏற்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

இலங்கை அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என மாற்றி பெயரோடு நிறுத்தாமல், செயலிலும் நிகழ்த்திக் காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்காக 317 கோடி ரூபாய் செலவு செய்து, புதிய குடியிருப்புகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்வி, பெண்களுக்கு சுழல் நிதி, நியாய விலைக் கடைகளில் தமிழக மக்களுக்கு வழங்கும் அனைத்து பொருட்களும் பாகுபாடின்றி ஒரு லட்சம் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கி, அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.