கச்சத்தீவை மீட்போம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது நகைச்சுவையாக உள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி..!

திமுக ஆட்சியில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு, தற்போது கச்சத்தீவை மீட்போம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது நகைச்சுவையாக உள்ளது என எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி தாலுக்கா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் வடக்கு உள் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுகம் ஞானதேவ் ராவ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சார் ஆட்சியருடன் இணைந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.



பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கச்சத்தீவை மீட்டுத் தருவதாக தற்போது உள்ள திமுக அரசு சொல்வது நகைச்சுவையாக உள்ளது. முந்தைய திமுக மற்றும் காங்கிரஸ் அரசு ஒன்றிணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது அனைவருக்கும் தெரியும், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்ள திமுக அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுவது அரசியல் நாடகம் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தும் திட்டத்தால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும்அதை நம்பியுள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த இந்த பகுதி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...