ஜூன் 1-ஆம் தேதி முதல் கால்நடைகள் வெளியே சாலைகளில் சுற்றித்திரிந்தால், மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு குறைந்தது 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. ஆகையால் கால்நடைகளை வைத்திருப்போர் (ஆடு, மாடு, குதிரை,) தங்கள் வீட்டுக்குள்ளேயே வளர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ஜூன் 1-ஆம் தேதி முதல் கால்நடைகள் வெளியே சாலைகளில் சுற்றித்திரிந்தால், அக்கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்களால் பிடித்தம் செய்யப்பட்டு குறைந்தது 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அபராதம் கட்டிய பின்னரே கால்நடைகள் விடுவிக்கப்படும். அபராதம் செலுத்தாமல் விடுபடும் கால்நடைகள் கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் உரிமையாளர்கள் மீது வழக்கும் பதியப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே கால்நடைகளை தங்கள் வீடுகளிலேயே வளாக்க அறிவுறுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.