சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்- கோவை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை..!

ஜூன்‌ 1-ஆம்‌ தேதி முதல்‌ கால்நடைகள்‌ வெளியே சாலைகளில்‌ சுற்றித்திரிந்தால்‌, மாநகராட்சி ஊழியர்களால்‌ பிடிக்கப்பட்டு குறைந்தது 5 ஆயிரம்‌ முதல்‌ 25 ஆயிரம்‌ வரை அபராதம்‌ விதிக்கப்படும்‌ என தெரிவித்துள்ளார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சாலையில்‌ சுற்றித்திரியும்‌ கால்நடைகளால்‌ போக்குவரத்து நெரிசல்‌ மற்றும்‌ சாலை விபத்துகள்‌ ஏற்படுகின்றன.

மேலும்‌, பொதுமக்களுக்கு பெரும்‌ இடையூறாக உள்ளது. ஆகையால்‌ கால்நடைகளை வைத்திருப்போர்‌ (ஆடு, மாடு, குதிரை,) தங்கள்‌ வீட்டுக்குள்ளேயே வளர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ஜூன்‌ 1-ஆம்‌ தேதி முதல்‌ கால்நடைகள்‌ வெளியே சாலைகளில்‌ சுற்றித்திரிந்தால்‌, அக்கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்களால்‌ பிடித்தம்‌ செய்யப்பட்டு குறைந்தது 5 ஆயிரம்‌ முதல்‌ 25 ஆயிரம்‌ வரை அபராதம்‌ விதிக்கப்படும்‌.

மேலும்‌, அபராதம்‌ கட்டிய பின்னரே கால்நடைகள்‌ விடுவிக்கப்படும்‌. அபராதம்‌ செலுத்தாமல்‌ விடுபடும்‌ கால்நடைகள்‌ கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்‌. அதன்‌ உரிமையாளர்கள்‌ மீது வழக்கும்‌ பதியப்படும்‌ என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே கால்நடைகளை தங்கள்‌ வீடுகளிலேயே வளாக்க அறிவுறுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...