டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : திருப்பூரில் 69-மையங்களில் 21,039-பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்..!

திருப்பூரில் 21-ஆயிரத்து, 39-பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு பணிகளை கண்காணிக்க, வருவாய் ஆய்வாளர் நிலையில், சூப்பர்வைசராக, 120-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 'ஏ' போட்டித் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து, 39 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.57 பள்ளி, கல்லூரிகளில், 69 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு பணிகளை கண்காணிக்க, துணைஆட்சியர் நிலை அதிகாரிகள் அடங்கிய, 11 'மொபைல் டீம்' உருவாக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் அடங்கிய, 10 பறக்கும் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

தேர்வு பணிகளை கண்காணிக்க, 72 வீடியோ கேமராமேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணிகளை கண்காணிக்க, வருவாய் ஆய்வாளர் நிலையில், சூப்பர்வைசராக, 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டித் தேர்வு நடக்கும் போது, வட்டங்கள் வாரியாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வுக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் தாலுகாவில் மட்டும் மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது.

திருப்பூர் மாநகரில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8:30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் தேர்வர்கள் காலை 7:30மணி முதலே உற்சாகமாகத் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இதன் பின்னர் தேர்வர்களின் அடையாள அட்டைகளை தேர்வு கண்காணிப்பாளர்கள் பரிசோதித்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.



பெண்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்த நிலையில், அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் குழந்தைகளைக் கொத்து விட்டு தேர்வு எழுதச் சென்றனர்.

இதனால் தேர்வர்களின் உறவினர்கள் என பலரும் தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்தனர். இதுபோல் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...