கோவை பொள்ளாச்சி அருகே 1500-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- 4 பேர் கைது..!

விசாரணையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்று கேரளாவில் விற்பனை செய்தது தெரிய வந்தது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் எஸ்.ஐக்கள் ஞானசேகரன், பாரத நேரு மற்றும் போலீசார் ஆனைமலை ரவுண்டானா அருகே நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது 50-கிலோ எடை கொண்ட 30-மூட்டைகளில் 1500-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் ரித்தீஷ் வாகனத்தில் வந்த சஞ்சித், சச்சின் உள்ளிட்ட 4-பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்று கேரளாவில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மற்றும் வாகனத்தை பதிவு செய்த போலீசார் 4-பேரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...