நூல் விலை உயர்வுக்கு எதிராக இன்று திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்..!

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்புகள் நடத்தும் (மே-16, 17) இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு 360-கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (மே-16,17) இன்றும் நாளையும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக நூல் விலை அபராதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில், இம்மாதம் கிலோ 40-ரூபாய் வரை விலை உயர்ந்து 470-ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும், உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதிக்கான வருகை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-மற்றும் 17-தினங்களில் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது. திருப்பூரில் மட்டும் சுமார் 10-ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதன் காரணமாக நாளொன்றுக்கு 360-கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேபோல, நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை உயர்வால் உற்பத்தி செய்துள்ள காடா துணிகளுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்ய முடியாமல் ஏற்கனவே 100-கோடி ரூபாய் அளவிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டமும் நாளைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...