பல்லடத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் பல்லடம் சட்டப்பணிகள் குழு சார்பாக நடந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில், பல்லடம் சட்டப்பணிகள் குழு சார்பாக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்த பேரணியை பல்லடம் நீதித்துறை நடுவர் சித்ரா துவக்கி வைத்தார்.



இதில், கலந்து கொண்ட மாணவ மாணவிகள் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி, மங்கலம் சாலை, என்.ஜி.ஆர் ரோடு வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.



இந்த பேரணியில் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...