உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்லடத்தில் ரெய்டு: கெட்டுப்போன 175- கிலோ மீன்கள் பறிமுதல்..!

மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மீன் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் துருப்பிடிக்காத நல்ல நிலையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கடை உரிமையாளர்களுக்கு வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.



தகவல் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் இருந்த மீன் விற்பனை கடைகள் மற்றும் பொரித்த மீன் விற்கும் 7-கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



இதில், பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மீன் கடையில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து 40-ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 175-கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் கிருமிநாசினி ஊற்றி அளிக்கப்பட்டது.



மேலும், இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தரம் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீன் விற்பனை செய்யும் கடைகளில் மீன் இறைச்சியை சரியான வெப்பநிலை காட்டும் குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்த வேண்டும், குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படும் மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மீன் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் துருப்பிடிக்காத நல்ல நிலையில் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...