கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து - கணவர் கைது…!

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் (49). இவரது மனைவி கிரேஸ் பியூலா (33). திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையாகி பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கிரேஸ் பியூலா சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட், கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து மீண்டும் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்திலும் வெட்டியுள்ளார். இதைக் கண்ட அவரது மகள் பயத்தில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அப்போது கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் அழைத்து தகவலை கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அவர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...