கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் 'மாஸ் கிளீனிங்' சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு..!

உள்ளூர் மக்கள் மற்றும் அண்டை மாநில பயணிகளும் தூய்மையான மாநகராட்சியாக கோவை உள்ளது என பாராட்டும்படி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடத்திலும், தூய்மை பணியாளர்களிடத்திலும் அறிவுறுத்தினார்.



கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் "மாஸ் கிளீனிங்" சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வெளியூர் பேருந்து நிலையங்களை தூய்மையாக வைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய கோவை மாநகராட்சி சுகாதார குழுவினர் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் உள்ள வெளியூர் பேருந்து நிலையங்களை "மெகா மாஸ் கிளீனிங்" மூலம் தூய்மைப்படுத்தும் பணியை கடந்த வாரம் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

முதற்கட்டமாக காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையத்தில் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பேருந்து நிலையங்களாக மாஸ் கிளீனிங் நடைபெறுகிறது.

இன்று உக்கடம் உள்ளூர் மற்றும் கேரள மாநில பேருந்துகள் வந்து செல்லும் உக்கடம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதிகளில் மாஸ் கிளீனிங்கை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் முனைவர். மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்களை ஆய்வு மேற்கொண்ட சுகாதார குழு தலைவர், அங்கு இருந்த ஊழியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.



சுகாதார மேலும், அங்கிருந்த டீ கடைகளில் சுகாதாரம் இன்றி உணவு பொருட்கள் விற்பனை செய்ய கூடாது என்று கூறியவர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும், உள்ளூர் மக்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வரும் பயணிகளும் தூய்மையான மாநகராட்சியாகக் கோவை உள்ளது என பாராட்டும்படி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடத்திலும், தூய்மை பணியாளர்களிடத்திலும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்லம்பாட்ஷ, திமுக பகுதி கழக பொறுப்பாளர் பதுரூதீன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டவுன் ஆனந்த், டிஸ்கோ காஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...