குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.


திருப்பூர்: தொங்குட்டிபாளையம் அருகே வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவரது கணவர் ஆனந்தகுமார். தொங்குட்டிபாளையம் ஏழாவது வார்டு உறுப்பினராக கார்த்திகா உள்ளார்.

இந்நிலையில், தொங்குட்டிபாளையம் பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருவதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மனோகரன், வெள்ளியங்கிரி ஆகியோர் எங்களது வீடு மற்றும் நிலத்தைப் போலியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், காலியாக உள்ள நிலத்தையும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

தற்போது எங்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி மிரட்டி வருவதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி போலியாக அவர்கள் தயாரித்துள்ள ஆவணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மன்னனை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றனர்.



உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...