கோவையில் சாலையில் சென்ற திருநங்கைக்கு கத்தி குத்து - டாஸ்மாக் பார் ஊழியர்கள் கைது…!

படுகாயமடைந்த, திருநங்கை தர்ஷா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரை கத்தியால் குத்திய மேகநாதன் மற்றும் பூவரசன் ஆகிய இருவரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை சூலூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்ஷா (33). திருநங்கையான, இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்துநெசவாளர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கிருந்த பாரில் மது கேட்டுள்ளார்.

அப்போது, பாரில் வேலை செய்து கொண்டிருந்த பூவரசன் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேர் மதுபாட்டில் கொடுக்க முடியாது என தெரிவித்ததால், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தர்ஷா மற்றும் நண்பர்கள் திருச்சி சாலை ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் திரையரங்கு அருகே வந்தபோது, மேகநாதன் மற்றும் பூவரசன் இருவரும் தர்ஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆத்திரமடைந்த பூவரசன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, தர்ஷாவின் கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த தர்ஷா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், பூவரசன் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...