கோவை‌ மாநகராட்சியில் ரூ.49.62-கோடி மதிப்பீட்டில்‌ 263-புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்..!

கோவை‌ மாநகராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில்‌ ரூ.5.59 கோடி மதிப்பீட்டில்‌ 9 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்‌, ரூ.49.62 கோடி மதிப்பீட்டில்‌ 263-புதிய திட்டப்பணிகளையும், அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற அரசு விழாவில்‌ ரூ.5.59 கோடி மதிப்பீட்டில்‌ 9 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்‌, ரூ.49.62 கோடி மதிப்பீட்டில்‌ 263 புதிய திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி ஆகியோர்‌ தொடங்கி வைத்தார்கள்‌.

இவ்விழாவில்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளரும்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை செயலாளருமான சிவதாஸ்‌ மீனா‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.

இவ்விழாவில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வரவேற்புரையாற்றினார்‌, துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா நன்றி கூறினார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பணிபுரிந்து பணிக்காலத்தில்‌ காலமான பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு 18 நபர்களுக்கு தூய்மை பணியாளர்‌ பணி நியமன ஆணை வழங்கி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்‌ 058 நிதியில்‌ பெறப்பட்ட 25 தள்ளுவண்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.

மேலும்‌ கனவு மெய்படவேண்டும்‌ திட்டத்தை தொடங்கி வைத்து, பொறியியல்‌ பட்டப்படிப்பு பயில விரும்பும்‌ மாணவ மாணவியர்களுக்கான களப்பயணத்தை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன்‌ கலந்துரையாடினார்கள்‌. முன்னதாக ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்‌. தொடர்ந்து, மாநகராட்சியில்‌ ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார்கள்‌.

அதனைத்‌ தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தில்‌ பணி மேற்கொள்ள ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்‌ சார்பாக ரூ.15 இலட்சம்‌ மதிப்பிலான காசோலையும்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியுடன்‌ இணைந்து பண்ணாரியம்மன்‌ நிறுவனம்‌ நகர்ப்புறங்களில்‌ சீர்மிகு ஆளுமை திட்டம்‌ செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு‌, மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி ஆகியோர்‌ முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்‌ நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா்‌ கே.என்‌.நேரு பேசியதாவது,



“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ரூ.5.59 கோடி மதிப்பீட்டில்‌ 9 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்‌, 49.62 கோடி மதிப்பீட்டில்‌ 263 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதில்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள்‌ தமிழ்நாட்டில்‌ நிலையான மேம்பாட்டு திட்டம்‌ ஆகிய திட்டங்களின்‌ கீழ்‌ 715 தார்சாலை அமைக்கும்‌ பணி 196 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கோவையிலும்‌ பணிகள்‌ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதே திட்டத்தில்‌ 237 சாலைகள்‌ 26.35 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று கொண்டிருக்கிறது. கோவையில்‌ மருத்துவமனைகள்‌ 32 தேசிய நகர்ப்புற நிலையங்கள்‌ பயன்பாட்டில்‌ இருக்கிறது. ரூ.16 கோடி மதிப்பீட்டில்‌ 63 எண்ணிக்கையிலான நகர்நல மையங்கள்‌ மற்றும்‌ 3 ஆய்வுக்கூடங்கள்‌ கட்டும்‌ பணிகள்‌ துவங்கி நடைபெற்று வருகிறது.

அதனைத்‌ தொடர்ந்து, 24 மணி நேரமும்‌ தமிழ்நாட்டில்‌ எந்த மாநகராட்சியிலும்‌ இல்லாத கோவை மாநகராட்சியில்‌ 24 மணி நேரமும்‌ 6 வார்டுகளில்‌ தண்ணீர் திறந்து விடும்‌ திட்டத்தை துவக்கி தற்போதும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

முன்னாள்‌ முதலமைச்சர்‌ தலைவர்‌ கலைஞர்‌ தொடங்கி வைத்த திட்டத்தை ஏழு ஆண்டு காலத்திற்கு பிறகு கூடுதல்‌ நிதி ஒதுக்கி மீண்டும்‌ அந்த திட்டத்தை கோவை மாநகராட்சியில்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது.

கோவை மாநகராட்சியில்‌ 100 வார்டுகளில்‌ 60 வார்டுகளுக்கு தொடர்ந்து தண்ணீர்‌ தருகின்ற பணிகள்‌ தொடர்ந்து நிறைவேற்றியிருக்கிறோம்‌.

சிறுவாணியிலிருந்து நமக்கு வரவேண்டியது 909 MLD தண்ணீர்‌ வரனும்‌ ஆனால்‌ இப்பொழுது 24 MLD தண்ணீர்‌ தான்‌ வந்து கொண்டிருக்கிறது. ரூ.591.14 கோடி செலவில்‌ பாதாள சாக்கடை திட்டத்தை முதலமைச்சர்‌ கோவையில்‌ அறிவித்திருக்கிறார்கள்‌.

அதே போல்‌ நமக்கு நாமே திட்டத்தின்‌ கீழ்‌ 20.50 கோடி செலவில்‌ பணிகள்‌ துவக்கப்படவுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தில்‌ 20.50 கோடி செலவிலும்‌, ரூ.7.48 கோடி செலவில்‌ Non Motorized Transport (NMT) Corridors திட்டத்தை அடிக்கல்‌ நாட்டி தொடங்கி வைத்திருக்கின்றோம்‌. எனவே, கோவை மாநகராட்சியில்‌ ரூ.5.59 கோடி மதிப்பீட்டில்‌ 9 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்‌, ரூ.49.62 கோடி மதிப்பீட்டில்‌ 263 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும்‌, 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில்‌ வாரிசு வேலைகளை வழங்கியும்‌, மாநகராட்சி விக்டோரியா ஹாலில்‌ புகைப்படகண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டடோம்‌.'” என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு‌ பேசினார்‌.

தொடர்ந்து, செய்தியாளர்‌ சந்திப்பில்‌ தெரிவித்ததாவது, “மாநகராட்சியை பொறுத்தவரையில்‌ இந்த ஆண்டு பல்வேறு முக்கிய திட்டங்களான விடுபட்ட

இடங்களில்‌ 24 கோடி ரூபாய்‌ செலவில்‌ பாதாள சாக்கடை திட்டங்கள்‌, எல்லா இடங்களுக்கு குடிநீர்‌ சமச்சீரான வழங்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம்‌ குப்பைகளை இருக்கின்றதோ அந்த இடங்களை சீர்‌ செய்யும்‌ பணிகளையும்‌, தேவையான இடங்களில்‌ கழிவுநீர்‌ ஓடை கட்டுவது, குடிநீர்‌ குழாய்‌ அமைப்பது இதுபோன்று பணிகளுக்கு 24 கோடி ரூபாய்‌ செலவில்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது. குறிச்சி குளம்‌ அழகுபடுத்தும்‌ பணியை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இந்த ஆண்டு கோவை மாநகராட்சியில்‌ 5 முக்கிய இடங்களான புலியகுளம்‌ முதல்‌ செளரிபாளையம்‌ சாலை, அவினாசி சாலையில்‌ 3 இடங்களிலும்‌, எஸ்‌.என்‌.ஆர்‌. சாலையில்‌ ஒரு இடம்‌ என மொத்தம்‌ 5 சாலைகளை இணைக்க ரூ.144 கோடியில்‌ அமைப்பதற்கான பணிகள்‌ நடைபெறவுள்ளது. ரூ.200 கோடி மதிப்பீட்டில்‌ செம்மொழி பூங்கா அமையவுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில்‌ குப்பையிலிருந்து மின்சாரம்‌ தயாரிப்பதற்கான ஆலை அமைக்கப்படவுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ்‌ 06 இலகுரக வாகனங்கள்‌ 105 எண்ணிக்கையில்‌ வாங்குவதற்கு ரூ.7.3 கோடி மதிப்பீட்டில்‌ கொள்முதல்‌ செய்யும்‌ பணி நடைபெற்று வருகிறது.ரூ.4.43 கோடி மதிப்பீட்டில்‌ 500 கூப்பை சேகரிக்கும்‌ தொட்டி மற்றும்‌ 5 குப்பை அள்ளும்‌ வாகனங்கள்‌ (Compactor) வாங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ” என தெரிவித்தார்‌.

மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பேசியதாவது, 






“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஏறத்தாழ 196 கோடி மதிப்பீட்டில்‌ 715 தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இன்னும்‌ கூடுதலாக விடுபட்ட பகுதிகளில்‌ அனைத்தும்‌ விரைவில்‌ தார்‌ சாலை அமைப்பதற்கான சிறப்பு நிதிகளையும்‌ முதலமைச்சர்‌ வழங்கியிருக்கின்றார்கள்‌. இந்நிகழ்ச்சியில்‌ பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்து சிறப்பித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்‌.நேரு அவர்களுக்கு கோவை மாவட்டம்‌ சார்பாகவும்‌, மாநகராட்சி சார்பாகவும்‌ மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிடேன்‌. என பேசினார்‌.

முன்னதாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணியின்‌ தற்போது நடைபெற்று வரும்‌ பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா்‌ கே.என்‌.நேரு, மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ ஏ செந்தில்பாலாஜி நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. தொடர்ந்து, சுங்கம்‌ பகுதியில்‌ வாலாங்குளத்திலிருந்து தண்ணீர் வெளியேரும்‌ பகுதி, திருச்சி சாலையில்‌ தண்ணீர் வெளியேரும்‌ பகுதி ஆகிய இடங்களையும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ முடிவுற்ற பணிகளான மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்குட்பட்ட ரேவதி நகர்‌ பகுதியில்‌ ரூ.250 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 24 மணி நேர குடிநீர்‌ விநியோக திட்டப்பணிகள்‌, பி.என்‌.புதூர்‌ பகுதியில்‌ ரூ.56 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியின்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டும்‌ பணிகள்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண் 4க்குட்பட்ட சரவணம்பட்டி ரூ.56 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாநகராட்சி பள்ளியில்‌ கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள்‌ கட்டும்‌ பணிகள்‌, வார்டு எண்‌.27க்குட்பட்ட ஆவாரம்பாளையம்‌ சாந்தி நகர்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ நிதியின் கீழ்‌ ரூ.30 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள புதிய சமுதாக கூடம்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.7க்குட்பட்ட நேரு நகர்‌ பகுதியில்‌ ரூ.59 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டும்‌ பணிகள்‌, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.9க்குட்பட்ட கோவை புதூர் லட்சுமி நகர்‌ பகுதியில்‌ ரூ.49.80 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ உள்ளரங்கு இறகுப்பந்து கூடம்‌, வார்டு எண்‌.89 க்குட்பட்ட காசிநாத்‌ கார்டன்‌ பகுதியில்‌ ரூ.28.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ உள்ளரங்கு உடற்பயிற்சி கூடம்‌ மற்றும்‌ விளையாட்டு அரங்கம்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.4 க்குட்பட்ட ஹரிபுரம்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினா்‌ நிதியின்கீழ்‌ ரூ.30 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம்‌ ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, உட்கட்டமைப்பு மற்றும்‌ வசதிகள்‌ திட்டத்தின்கீழ்‌ ரூ.1448.286 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.91க்குட்பட்ட செங்குளம்‌ குளக்கரையில்‌ பாலக்காடு பிரதான சாலை முதல்‌ நேதாஜி நகர்‌ வரை தடுப்புச்சுவர்‌, பாலம்‌ கட்டுதல்‌, தெருவிளக்குகளுடன்‌ தார்சாலை அமைத்தல்‌ பணியினையும்‌, மத்திய மண்டலத்தில்‌ சீர் மிகு நகரத் திட்டத்தின்கீழ்‌ வார்டு எண்‌.83ககுட்பட்ட ஆடிஸ்‌ வீதியில்‌ ரூ.250 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அறிவுசார்‌ மையம்‌ அமைத்தல்‌ பணியினையும்‌, பெரியகடை வீதியில்‌ ரூ.187 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, ராஜவீதியில்‌ ரூ.173 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, கிராஸ்கட்‌ சாலையில்‌, நஞ்சப்பா சாலை சந்திப்பு முதல்‌ லட்சுமி வணிக வளாகம்‌ வரை ரூ.163 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, கிராஸ்கட்‌ சாலையில்‌, லட்சுமி வணிக வளாகம்‌ முதல்‌ பவர்‌ ஹவுஸ்‌ சாலை சந்திப்பு வரை ரூ.225 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, Non Motorized Transport (NMT) Corridors அமைக்கும்‌ பணியினையும்‌, 24மணி நேர குடிநீர்‌ விநியோக திட்டத்தின்கீழ்‌ கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.55க்குட்பட்ட பாரதி நகர்‌ பகுதியில்‌ ரூ.150 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்குட்பட்ட நியூ மடத்தூர்‌ பகுதியில்‌ ரூ.100 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும்‌ பணியினையும்‌, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 89, 94, 97 மற்றும்‌ 100 ஆகிய வார்டு பகுதிகளில்‌ 9 இடங்களில்‌ PMJVK திட்டத்தின்கீழ்‌ ரூ.135 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டு மையம்‌ கட்டும்பணியினையும்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.53க்குட்பட்ட காமராஜர்‌ பிரதான சாலையின்‌ மேற்கு பகுதியில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.20.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர்‌ வடிகால்‌ திரும்ப கட்டும்‌ பணி, ஆக மெத்தம்‌ ரூ.28.52 கோடி மதிப்பீட்டில்‌ திட்ட பணிகளுக்கான துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌, தெற்கு மண்டலத்தில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்‌ (TNSUDP) ரூ.722.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌, வார்டு எண்‌.89க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர்‌ இந்தியன்‌ வங்கி வீதி, ராதாராம்‌ நகா்‌ பிரதான சாலை, பேங்க்‌ வீதி, பாக்யா நகர்‌, ஜீடிசியல்‌ காலனி, சமீம்‌ கார்டன்‌, காசிநாத்‌ கார்டன்‌, நேரு நகர்‌ பகுதிகளில்‌ 4.84 கி.மீ. தொலைவிற்கும்‌, வார்டு எண்‌.90க்குட்பட்ட பள்ளிவாசல்‌ வீதி, சாந்தி நகா்‌, மீனாட்சி நகர்‌, தில்லை நகர்‌, முல்லை நகர்‌, ஆல்பா நகர்‌, கோவைப்புதூர்‌ ஹவுசிங்‌ யூனிட்‌ பகுதிகளில்‌ 7.26 கி.மீ. தொலைவிற்கும்‌, ரூ.519.80 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌, வார்டு எண்‌.91க்குட்பட்ட கே.எம்‌.ஆர்‌.கார்டன்‌, ஜி.டி.லே அவுட்‌, ஸ்ரீநகர்‌ மெயின்‌ ரோடு, எஸ்‌.கே.நகா்‌ மெயின்‌ ரோடு, பாலு அவென்யூ, பழனியப்பா நகர்‌, காமாட்சி நகர்‌, தெற்கு மண்டலம்‌, ராமானுஜம்‌ நகா்‌, இட்டேரி மெயின்‌ ரோடு, காஸ்மோ

காலனி, மோனோ பாய்‌ நகர்‌, மல்லையா கார்டன்‌ பகுதிகளில்‌ 9.08 கி.மீ. தொலைவிற்கு, ரூ.362.04 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌, வார்டு எண்‌.92க்குட்பட்ட இ.பி.காலனி விரிவாக்கம்‌, சாரதா நகா்‌, மதுரைவீரன்‌ கோவில்‌ வீதி மற்றும்‌ பழனியப்பா நகர்‌ பகுதிகளில்‌ 1.94 கி.மீ. தொலைவிற்கும்‌, வார்டு எண்‌.93 க்குட்பட்ட இடையர்பாளையம்‌ மதுரைவீரன்‌ கோவில்‌ வீதி, மணிகண்டன்‌ நகர்‌, சர்ச்‌ வீதி, பெரியார்‌ நகர்‌, பூந்தோட்டம்‌ விரிவாக்கம்‌, பகவதி அம்மன்‌ நகர்‌, மற்றும்‌ அம்மன்‌ காலனி பகுதிகளில்‌ 4.28 கி.மீ.தொலைவிற்கும்‌, ரூ.356.40 மதிப்பீட்டில்‌, 95 மற்றும்‌ 99 வது வார்டு களுக்குட்பட்ட ஸ்ரீராம்‌ நகர்‌ மற்றும்‌ திருமறை நகர்‌ பிரதான சாலை, 99வது வாரடுக்குட்பட்ட ஸ்ரீராம்‌ நகர்‌ மற்றும்‌ செட்டிபாளையம்‌ பிரதான சாலையில்‌ 5.78 கி.மீ. தொலைவிற்கும்‌ தார்சாலை புதுப்பித்தல்‌ பணிகளுக்கும்‌, தேசிய நகர்ப்புற சுகாதாரத்திட்டத்தின் கீழ்‌ கிழக்கு மண்டலம்‌ 57வது வார்டில்‌ நெசவாளர்‌ காலனியிலும்‌, 56வது வார்டுக்குட்பட்ட ஒண்டிபுதூர்‌ பகுதியிலும்‌, வடக்கு மண்டலம்‌ 29வது வார்டுக்குட்பட்ட கணபதிபுதூரிலும்‌, 19வது வார்டுக்குட்பட்ட நேரு அவென்யூ பகுதியிலும்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.46, மருதகுட்டி லே அவுட்‌ பகுதியிலும்‌, 49வது வார்டு பாப்பநாயக்கன்பாளையம்‌ ஆகிய பகுதிகளில்‌ தலா ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுகாதார மையம்‌ கட்டுமான பணிகளையும்‌ துவக்கி வைத்தார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌ பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா்‌ கு.சண்முகசுந்தரம்‌‌, மதிப்பிற்குரிய துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, மண்டல தலைவர்கள்‌ (மத்தியம்‌) மீனாலோகு, (6மற்கு) கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, (தெற்கு) ர.தனலட்சுமி, (வடக்கு) வ.கதிாரவேல்‌, (கிழக்கு) இலக்குமி இளஞ்செல்விகாரத்திக்‌, கணக்குகள்‌ குழுத்தலைவர்‌ எம்‌.தீபா தளபதி இளங்கோ, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, கல்விக்குழு தலைவர்‌ மாலதி நாகராஜ்‌, நிலைக்குழு தலைவர்கள்‌, வரிவிதிப்பு மற்றும்‌ நிதிக்குழுத்தலைவர்‌  வி.பி.முபசீரா, நகரமைப்புக்‌ குழுத்தலைவர்‌ சோமு(எ)சந்தோஷ்‌, பணிகள்குழு தலைவர்‌ சாந்திமுருகன்‌, நியமனக்குழு உறுப்பினர்‌ மு.ராஜேந்திரன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ நா.காரத்திக்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) ராமசாமி, நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, நகரமைப்பு அலுவலர்‌ கருப்பாத்தாள்‌, மண்டல உதவி ஆணையாகள்‌ சரவணன்‌, சங்கர்‌, மோகனசுந்தரி, மாரிச்செல்வி, அண்ணாதுரை மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...