இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கோவை காரமடை பெல்லாத்தி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26), தனியார் மில்லில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மிருதுளா ஸ்ரீ (25) மகன் சாய்தக்சன் (5).
தற்போது அன்னூர் ஒரிக்கல்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். பிரகாஷ் தனது குடும்பத்தோடு நேற்று காரமடை சென்றுவிட்டு மீண்டும் தங்களது இருசக்கர வாகனத்தில் இரவு 11-மணிக்கு 3-பேரும் அன்னூர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது ஒரிக்கல்பாளையம் பிரிவு வந்து சாலையை கடக்க முயன்ற போது, கோவை - சக்தி சாலையில் அதிவேகமாக வந்த கார் பிரகாஷ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் படுகாயத்துடன் சாலையில் கிடந்தனர்.
இதையடுத்து, சாலையில் சென்றவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு 108- ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரகாஷ் மற்றும் சாய் தக்சன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மிருதுளா ஸ்ரீ மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த அன்னூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அன்னூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.