தமிழகத்தில் கைவரிசை காட்டிய கர்நாடக திருட்டு கும்பல் - மடக்கி பிடித்த கோவை தனிப்படை போலீஸ்….!

விசாரணையில், இந்த கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக விடுதிகளில் தங்கி மக்கள் நடமாட்டம் மற்றும் பணப் புழக்கம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, பணத்தை எடுத்து வருபவரின் கவனத்தை திசைதிருப்பி திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் தங்கி பல லட்சம் திருடிய கர்நாடகா திருட்டு கும்பலை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் கடந்த 26ஆம் தேதி, தன்னுடைய காரில் சென்றபோது வழிமறித்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், எட்வின் ஜோசப்பின் தனது வாகனம் பஞ்சர் ஆனதாக கூறியுள்ளார்.

இதை நம்பி கார் ஓட்டுநர் மற்றும் எட்வின் ஜோசப் இருவரும் கீழே இறங்கிய நேரத்தில், அங்கு காத்திருந்த மற்றொரு மூன்று மர்ம நபர்களுடன் சேர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ரூ.6.90 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக, அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கர்நாடகா விரைந்து சென்ற தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஸ்ரீனிவாஸ், சங்கர், அஜய் பாபு, நந்து ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது, ஓசூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த அந்த 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ 14 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.



இதையடுத்து, அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 22ஆம் தேதி காரமடையில் சிகரெட் வியாபாரியிடம் ரூ.1.52 லட்சம், மேட்டுப்பாளையம் பாரி கம்பெனி சாலையைச் சேர்ந்த அயூப்கான் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.1.43 லட்சம், அதேபோல் பொள்ளாச்சி சாலையில் தனியார் உணவகம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.2.96 லட்சம் மேலும் ஆத்தூரில் பெண் ஒரு,வர் மீது அரிப்பு பொடியை தூவி அவரிடம் இருந்த ரூ.1.20 லட்சம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றது இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொடர் விசாரணையில் இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக விடுதிகளில் தங்கி மக்கள் நடமாட்டம் மற்றும் பணப் புழக்கம் அதிகம் உள்ள மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து, பணத்தை எடுத்து வருபவரின் கவனத்தை திசைதிருப்பி திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

புகார் அளித்து 10 நாட்களுக்குள் துரிதமாக செயல்பட்டு கர்நாடக திருட்டு கும்பலை பிடித்த தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...